Oru Kaiyil Damarukam

Oru Kaiyil Damarukam

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார், சிவ சிவ
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

Best deals from amazon today

சிவ சிவ சிவ
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா
ஹர ஹர ஹர
ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா
அரிஅயனார் ஒரு புறம், ஆதிசக்தி மறு புறம் அரியணையில் அமர அய்யா
சிவ சிவ மயில் மேலே குமரன் அய்யா
பரிசங்கள் ஒதவும், வான்வெளியில் கோஷமும்,
வணங்கி ஏழு முனிகள் அய்யா
சிவ சிவ
வாத்தியங்கள் முழங்குதே அய்யா
ஹர ஹர ஹர
ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா
நந்தியும் பரிவாரங்களும், சுற்றி மூ கணமும் வந்து
சிவனை நின்று வாழ்த்துவாரையா
சிவ சிவ வணங்கி நின்று ஏற்றுவாரையா
இந்திரனும் தேவியும், எட்டில் இசை பாடலும், இசை கேட்டு மயங்கினாரய்யா
சிவ சிவ எப்போதும் வணங்கினாரய்யா
ஹர ஹர ஹர
ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,சிவ சிவ
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா
வெள்ளி மலை முருகனும், வேத கோஷ கூட்டமும்
துள்ளி விளையாடும் அய்யா
சிவ சிவ துதி பாடி வருவார் அய்யா
அள்ளி அருள் வீசுவாய், அன்போடு பேசுவாய்,
ஆனந்த கூத்தாடுவாய்
சிவ சிவ அடியாரை காப்பாற்றுவாய் ஹர ஹர ஹர
ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா…