Saranamappa Saranamayya

Saranamappa Saranamayya

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..
நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியே
சுற்றிவந்து ஐயன் பதம் தேடினேன் அந்த
சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன்.
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..
பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே
தவக்கலமாம் துளசி மாலை தாங்கினேன் – இந்த
தாரணியில் உன் புகழைப் பாடினேன்.
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..
ஸ்வாமி திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம்
ஐயப்பா திந்தக்கத்தோம் ஸ்வாமி திந்தக்கத்தோம்
சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடி
பேட்டையிலே துள்ளிவந்தேன் ஸ்வாமியே – அது
பேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே…
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே
இருமுடியும் தாங்கிக் கொண்டு பெருவழியில் நடக்கையிலே
கரிமலையில் கதறுகிறேன் ஐயனே
காத்தருள வேண்டுகிறேன் மெய்யனே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..
பாவனமாய் பம்பா தன்னில் பாலகனே உன்னைக் கண்டு
பாட்டுப் பாட பாவ வினை போகுதே
பக்தியோடு கை உனையே கூப்புதே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே.
ஆறு வாரம் நோன்பிருந்து ஆறு மூன்று படியேறி
ஆரவாரம் கூட்டத்துக்கு நடுவிலே
ஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே
சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே
இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே