Malaiyam Malaiyam
மலையாம் மலையாம் சபரிமலையாம்
மலையின் மேல் ஒரு சாமியாம்
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்
சரணம் சொல்லிப் போவோமாம்
மலையாம் மலையாம் சபரிமலையாம்
மலையின் மேல் ஒரு சாமியாம்
உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு
ஐயப்ப சரணம் பாடிக் கொண்டு
காடும் மேடும் நடந்து செல்லும்
ஐயப்பன்மார்கள் கோடி உண்டு
எரிமேலிப் பேட்டைத்துள்ளி
அழுதை வழியே நடந்து சென்றால்
கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்
எங்க ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல்
நடத்திச் செல்வான் எங்க ஐயப்பசாமியாம்
நதியாம் நதியாம் பம்பா நதியாம்
பாவம் தீர்க்கும் புண்ணிய நதியாம்
அந்த நதியில் ஆடி ஐயனைத் தேடி
நாமும் போவாம் நீலிமலையாம்
நீலிமலையில் ஏறும் நம்மை
ஏற்றும் சாமி ஐயப்பனாம்
குந்திவிடய்யா தள்ளிவிடய்யா
என்று சொல்ல வைப்பானாம்
பதினெட்டுப்படியும் கடந்து
சபரிமாமலைக் கோவில் வந்து
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு
நெய்யபிஷேகம் செய்வோமாம்
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு
நெய்யபிஷேகம் செய்வோமாம்
மலையாம் மலையாம் சபரிமலையாம்
மலையின் மேல் ஒரு சாமியாம்