Entha Malai Sevithalum
Back to Album

Entha Malai Sevithalum

Tamil Lyrics

English Lyrics

ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க
ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா…
கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய்
நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே
ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா…
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமலாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் ஐயன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கேயும் நான் கண்டதில்லையே…
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே………….. சரணம் ஐயப்பா…