Enna Varam Vendum
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி
மன்னவன் அருள்வான் பாருங்கள்
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி
பொன்னம்பல மேடையில் கூடுங்கள் ஐயன்
பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள்
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி
மண்டல நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து
அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து
மணிகண்ட பெருமானின் மகிமையை அறிந்து
ஒரு கணத்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம்
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி
சத்தியச் சுடராக சபரியில் கோவில் கொண்டான்
த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான்
குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்
வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம்
என்ன வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி