
Back to Album
Solla Solla Inikkuthada
Tamil Lyrics
English Lyrics
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
பிறந்த போது எனது நெஞ்சு
அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது
அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச்
சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும்
முதுமை வராது
கந்தா முதுமை வராது குமரா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று
மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ முருகா!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!