Enthan Kuralil
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே – அங்கு
உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே-அதில்
நான் என்றும் மாறாத தனி இனமே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே- அதில்
காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே – அவன்
என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே