Yesu Christhuvin
இயேசுக் கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு இராஜவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்
மனிதர் யாவரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜ பாதையை செம்மையாக்குவோம்
சாத்தானின் சதகளை தகர்த்திடுவோம்
இனி இயேசுவிற்காய் வாழ்ந்திடுவோம்
இந்த பார் முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம்
ஆவி ஆத்மா தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல அவரே எல்லாம்
என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திருப்போம்
Related Songs