Yaarai Naan Pugaluven
Back to Album

Yaarai Naan Pugaluven

Tamil Lyrics

English Lyrics

யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன்
என் கதியும் பங்கும் யார்
நான் பாராட்டும்மேன்மை யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
யார் நான் நிற்கும் கன்மலை
யார் என் திட நம்பிக்கை
குற்றத்தைச் சுமந்தோர் யார்
தெய்வ நேசம் தந்தோர் யார்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
என்தன் பிராண பெலன் யார்
ஆத்துமத்தின் சாரம் யார்
யாரால் பாவி நீதிமான்
யாரால் தெய்வ பிள்ளை நான்
தெய்வ ஆட்டுக்குட்டியால்
கஸ்தியில் சகாயர் யார்
சாவின் சாவு ஆனோர் யார்
என்னைத் தூதர் கூட்டத்தில்
சேர்ப்போர் யார் நான் சாகையில்
தெய்வ ஆட்டுக்குட்டிதான்
இயேசுதான் என் ஞானமே
அவர் என் சங்கீதமே
நீங்களும் புகழுங்கள்
அவரைப் பின்செல்லுங்கள்
தெய்வ ஆட்டுக்குட்டியை.