Visuvaasiyin Kaathil
Back to Album

Visuvaasiyin Kaathil

Tamil Lyrics

English Lyrics

விசுவாசியின் காதில் பட,
இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில்
தொனி இனிப்பாகுது பாசம்.
பசித்த ஆத்துமாவைப்
பசியாற்று மன்னாவதுவே@
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்
முற்றும் அந்தப் பெயரே.
துயரையது நீக்கி
காயமாற்றிக் குணப்படுத்தும்@
பயங்கள் யாவும் இயேசுவென்றால்
பறந்தோடியே போகும்.
காயப்பட்ட இருதயத்தைக்
கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது
மயக்கமின்றிவிடுக்கும்.
எல்லை இல்லாக் கிருபைத்திரள்
ஏற்று நிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம்
இயேசுவென்ற பெயரே.
என்னாண்டவா, என் ஜீவனே
என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை நீரே
ஏற்றுக்கொள்ளும், தேவே.