Veru Jenmam Venum
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் அருள் தானமாக வரும்;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.
மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;
வேறு ஜென்மம் வேணும், - மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.