
Back to Album
Varahi Stotram
Tamil Lyrics
English Lyrics
உக்ர ரூபிணி உமையவள் தேவி பரதேவி
உன் மத்த பைரவி உமா சங்கரி உமாதேவி
ஜெய ஜெய மங்கள காளி பைரவி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
1) times)
தர்மத்தை காத்த நாயகி நான்மறை தேவி
விசுக்கரன் என்னும் அரக்கனை அழித்தவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
2) times)
தர்ணத்தில் வருபவள் குணமிகு தாயவள்
தண்டத்தை எடுத்தவள் தண்டினி ஆனாவளே
ஜெய ஜெய மங்கள காளி பைரவி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
3) times)
மாபெரும் சக்தி மஹா வாராஹி மங்களா செல்வி
சியமாளா ரூபணி சிங்கார ரூபிணி வாராஹா ரூபிணி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
4) times)
எண்ணிய பேரை காப்பவளே கற்பகமே
வாட்டம் போக்கும் நாயகி வாராஹி தேவி வார்த்தாளி
ஜெய ஜெய் மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
5) times)
ஆண்டவளே எம்மை ஆள்பவளே அகிலாண்ட நாயகியே
கண்டத்தில் நின்று கருனையும் கொண்டு காப்பவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
6) times)
அனுதினம் உன்னை அண்டியே வந்தோம்
அணுவுக்குள் அணுவாக திகழ்பவள் வார்த்தாளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி ((
7) times)
தேடி வந்தால் ஓடி வருபவள் தேவை அனைத்தையும் தருபவளே
பாடியே வந்தோம் பாவங்கள் போக்கி
சாபங்கள் போக்கிட வேண்டும் ம்மா
ஜெய ஜெய மங்களா காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி ((
8) times)
அற்புத ரூபிணி கற்பக சங்கரி பொற்பாதம் சரணம் அம்மா
நற்பலன் யாவும் தந்திடும் நாயகி பரிபூரணி அம்பிகையே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி ((
9) times)
ஊசி முனையில் தவம் புரிந்த செய்யும் காமகோடி பீடமே
கம்பா நதியில் சிவனை வேண்டி பூஜித்தா காமாட்சி உமையே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
10)
காலனை உதைத்து மஹா சிவனின் அன்புக்கு உரியவளே
பட்டர் பாட்டுக்கு பணிந்த வந்த பயங்கரி எங்கள் அபிராமி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹ அம்பிகே திரிசூலி (
11)
அழகிமே கண்கள் ஆணந்தமே அதுவே போதும் அம்மா உந்தன் பேரழகே
சிங்கத்தின் மீது அமர்ந்து வருபவளே அந்த சிவானாரின் பத்தினியே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
12)
வந்திடும் துன்பத்தை தூர ஓட்டும் தூயவள் மஹா தூர்க்கையே
தந்திடும் செல்வத்தை குடுப்பவளே எங்கள் அம்பிகையே ஸ்ரீதேவி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
13)
சிம்ம முகத்துடன் சிவந்த கரத்துடன் அருள் புரிபவளே
நரசிம்மர் பாச தங்கை ப்ரத்தியங்கிர தேவி பயங்கரி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
14)
சிரிக்கும் பேரிழகி சிவந்த முகத்தழகி மாரியம்மா
வடக்கு நோக்கியே அமர்ந்த சக்தியே சமயபுரத்தாளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
15)
மூன்று கடல் சங்கமிக்கும் அந்த கரையிலே
மூன்று கண்களுடன் அருள் புரிந்திடும் குமரியம்மா
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
16)
எத்தனை எத்தனை கோலம் அம்மா எடுத்தவளே வாராஹி
அத்தனை ரூபத்தில் உன் அருள் முகம் கண்டோம் வார்த்தாளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (
17)
புற்றினிலே பெரும் சர்ப்பமாக வலமாக வருபவளே
தண்ட காருண்யம் என்னும் தலத்திலே சதிராடும் எங்கள் அங்காளி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (
18)
தேடிய ஞானமே நீ தான்ம்மா திருவடி இடம் வேண்டும்மா
பாடிய பக்தரை காத்திட உனை விட்டால் யார்யம்மா
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திரிசூலி (
19)
கருவை காத்தவளே கரு மாரிய அம்பிகையே சீதாள தேவி திருமளே
திருவேற்காட்டிலே திருவழகுடனே கதியென வருபவர்களை காப்பவளே
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீவாராஹி அம்பிகே திரிசூலி (
20)
பாடிய கீர்த்தனை ஏற்றிட வேண்டும் எங்கள் அம்பிகையே
தேடிய வரத்தை தந்திட வேண்டும் திருவழகே வாராஹி
ஜெய ஜெய மங்கள காளி பயங்கரி
ஸ்ரீ வாராஹி அம்பிகே திருசூலி (
21)
அன்னை வாராஹி ஸ்தோத்திரம் பரிபூரணம்
மங்களம் பரிபூரணமே எம் அன்னை வாராஹி பார்வையிலே