Vaan Nilave Nee Vaa Vaa
Back to Album

Vaan Nilave Nee Vaa Vaa

Tamil Lyrics

English Lyrics

வான் நிலவே நீ வா வா,
பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா,
விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின்
தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா
வாடை வீசும் நேரம்,
பெத்தலை சத்திர ஓரம்
கண்மணி அவதாரம்
வாடை வீசும் நேரம்,
பெத்தலை சத்திர ஓரம்
கண்மணி அவதாரம்
கந்தை ஆடை தானோ,
பசும்புல்லணை மேடை தானோ
கந்தை ஆடை தானோ,
பசும்புல்லணை மேடை தானோ
என் பாவம் நீக்க இன்று
என் இயேசு மண்ணில் வந்தார்
வான் நிலவே நீ வா வா,
பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா,
விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின்
தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா
வானில் தவழும் மேகம்,
மேகங்கள் நடுவில் இராகம்
தூதரின் பண் கேட்குதே
வானில் தவழும் மேகம்,
மேகங்கள் நடுவில் இராகம்
தூதரின் பண் கேட்குதே
வானம் தேன் சிந்துதே,
புது கானம் தாலாட்டுதே
வானம் தேன் சிந்துதே,
புது கானம் தாலாட்டுதே
என் பாவம் நீக்க இன்று
என் இயேசு மண்ணில் வந்தார்
வான் நிலவே நீ வா வா,
பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா,
விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின்
தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா