Undran Suyamathiye
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே; - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே.
மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே - தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.
நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் - அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.
Related Songs