உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூயவழி
வழிப் பிரயாணி மூடனைப்போல்
வழி தவரு நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும்
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல்கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே
இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும்