Tham Kirubai Perithallo
Back to Album

Tham Kirubai Perithallo

Tamil Lyrics

English Lyrics

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே
தாழ்மையுள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
நிர்மூலமாகாததும்
நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே
தினம் அதிகாலையில்
தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே
மாபரிசுத்த ஸ்தலம்
கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே
ஒன்றை ஒன்று சந்திக்கும்
சத்தியமும் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமே
ஸ்தோத்திர ஜெபத்தினால்
பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே