
Back to Album
Parisuththaraam Deva Mainthan
Tamil Lyrics
English Lyrics
பரிசுத்தராம் தேவமைந்தன்
பிறந்த நன்னாள் இன்று
மரிமடியில் குழந்தையாக
தவழ்ந்து வந்தார் அன்று
நாசரேத்தில் வளர்ந்து
வந்தார் பெற்றோருடன் நன்று
சுவிசேஷம் சொல்லி வந்தார்
பல இடங்கள் சென்று
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு
மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து
நமது உள்ளில் பிறந்ததால்
வானில் வெள்ளி வழி
நடத்த ராயர்களும் விரைந்தனர்
தொழுவத்திலே புல்லணையில்
பாலகனைக் கண்டனர்
யூதர் ராஜா இயேசு எனக்
கண்டு மனம் மகிழ்ந்தனர்
பொன் போளம் தூபம் தனை
காணிக்கையாய் படைத்தனர்
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு
மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து
நமது உள்ளில் பிறந்ததால்
பாவிகளை மீட்பதற்காய்
கர்த்தர் இயேசு உதித்தார்
பாவங்களைத் தோளின்
மேலே சிலுவையாக சுமந்தார்
தேவ அன்பை உலகம்
உணர ஜீவ பலியாக தந்தார்
சாவை வென்று தேவ சுதன்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு
மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து
நமது உள்ளில் பிறந்ததால்
குதூகலமாய் தேவனை மனம்
ஸ்தோத்தரித்து பாடுதே
களிப்புடனே எந்தன் கால்கள்
குதித்து நடனம் ஆடுதே
இரட்சிப்பினை நல்க வந்த
இயேசுவை மனம் தேடுதே
ஜெய கிறிஸ்து மீண்டும்
வரும் நாளை உலகம் நாடுதே
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
பாவபாரம் நம்மை விட்டு
மறைந்து போனதே
மகிழ் கொண்டாடுவோம் நாம்
மகிழ் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு கிறிஸ்து
நமது உள்ளில் பிறந்ததால்