Paraththin Jothiye
Back to Album

Paraththin Jothiye

Tamil Lyrics

English Lyrics

பரத்தின் ஜோதியே
என்மேல் இறங்கிடும்
பிரகாசத்துடனே
உள்ளத்தில் விளங்கும்
நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
நற் கதிர் வீசக்கடவீர்
நிறைந்த அருளால்
லௌகீக ஆசையை
அகற்றி, ஆவியால்
பேரின்ப வாஞ்சையை
வளர்த்து நித்தம் பலமாய்
வேரூன்றச் செய்யும் தயவாய்
நீர் என்னை ஆளுகில்
நான் வாழ்ந்து பூரிப்பேன்
நீர் என்னை மறக்கில்
நான் தாழ்ந்து மாளுவேன்
என் ஊக்கம் ஜீவனும் நீரே
கடாட்சம் செய்யும், கர்த்தரே
தெய்வன்பும் தயவும்
உம்மாலேயே உண்டாம்
நற் குணம் யாவுக்கும்
நீர் ஜீவ ஊற்றேயாம்
நான் வாழும்படி என்றைக்கும்
என்னை நிரப்பியருளும்