Paar Munnanaiyil
பார் முன்னணையில்
தேவகுமாரன் விண் ஆளும்
நாதர் பாலகனாய்
நம்பாவம் யாவும் தம்மீது
ஏற்கும் தேவாட்டுக்
குட்டித் தோன்றினார்
மாதூய பாலன் மீட்பின்
நல்ல வேந்தன் மாசற்றோ
ராகப் பூவில் வாழ்ந்தார்
தீயோனை வென்று நம் பாவம்
போக்கி மகிமை
மீட்பர் ஆளுகின்றார்
தீர்க்கர் முன்கூற,
விண்தூதர் பாட விந்தையின்
பாலன் வந்துதித்தார்
பூலோக மீட்பர் பாதாரம்
சேர்வோர் அழியா
வாழ்வைக் கண்டடைவார்
Related Songs