Nal Meetpar Patcham

Nal Meetpar Patcham

நல் மீட்பர் பட்சம்
நில்லும் இரட்சண்ய வீரரே
இராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்
பின்வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்
நல் மீட்பர் பட்சம் நில்லும்
எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்.
நல் மீட்பர் பட்சம்
நில்லும் எவ்வீர சூரமும்
நம்பாமல், திவ்விய
சக்தி பெற்றே பிரயோகியும்
சர்வாயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் சேல்லுவீர்
நல் மீட்பர் பட்சம் நில்லும்
போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம்,
வெற்றிப் பாட்டாகமாறுமே
மேற்கொள்ளும், வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே
வீற்றரசாளுவார்