
Back to Album
Maa Maatchi Karthar
Tamil Lyrics
English Lyrics
மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்
சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே
மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே
ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்
Related Songs