Kirishthuvin Adaikalathil
Back to Album

Kirishthuvin Adaikalathil

Tamil Lyrics

English Lyrics

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில் மந்தைகள்
நடுவினில் நெருங்கவும் முடியாது
இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில் தீபமாய்
இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்
தேவனின் இராஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையாய் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை
பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது