Kinjithamum Nenje
Back to Album

Kinjithamum Nenje

Tamil Lyrics

English Lyrics

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ.
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.
பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம்.
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.
பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெ வ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்@ தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம்.
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.
ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் - அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ.