Kartharin Maamsam
Back to Album

Kartharin Maamsam

Tamil Lyrics

English Lyrics

கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள்
தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம்
தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர்.
தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய்.
பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம்
சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார்
உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்
தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார்.
விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார்.
எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.