
Back to Album
Karthar Ennai Visaaripavar
Tamil Lyrics
English Lyrics
கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.
பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான்.
தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ.
வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே.
தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?
Related Songs