Ethanai Naatkal
Back to Album

Ethanai Naatkal

Tamil Lyrics

English Lyrics

எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?
ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்
சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?
தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?
கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?
உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?