
Back to Album
Enthan Ullam Puthu
Tamil Lyrics
English Lyrics
எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக கொண்டாடுவேன்
சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே
சில வேளை இமைப்பொழுது தன் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே
பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட - என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம்
Related Songs