
Back to Album
Devasenai Vaanmeethu
Tamil Lyrics
English Lyrics
தேவசேனை வான்மீது
கோடிகோடியாகத் தோன்றும்
பலகோடித் திரள்கூடி
குகைதேடி வேகம் ஓடும்
விண்மீன்கள் இடம்மாறிப்
பாரெங்கும் வந்து கொட்டும்
நானோ ஆடி மிகப்பாடி
என் நேசருடன் சேர்வேன்
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
ஐந்து கண்டம் தனில் ஆளும்
ஆட்சியாவும் அற்றுப்போகும்
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல்
கேட்கும் கண்ணீர் சிந்தும்
தூயர் கூட்டம் சுத்த உள்ளம்
சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
நானோ ஆடி மிகப்பாடி
என் நேசருடன் சேர்வேன்
கடல் குமுறும் கரை உடையும்
கப்பல் கவிழும் பெரும் நாசம்
போக்குவரத்து யாவும் நிற்கும்
இனி உலகம் என்பதில்லை
வாக்குமாறா வேதம் கூறும்
வார்த்தை யாவும் நிறைவேறும்
நானோ ஆடி மிகப்பாடி
என்நேசருடன் சேர்வேன்
Related Songs