Avar Enthan
Back to Album

Avar Enthan

Tamil Lyrics

English Lyrics

அவர் எந்தன் சங்கீதமானவர்
பெலமுள்ள கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான அவரை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்துவோம்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
துத கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவனவரே
இரண்டு மூன்றுபேர் எந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் வாழம்த்துவோம்
வானவர் கிறிஸ்தேசு நாமமதை
வாழ்நாள் முழுவதும் வாழ்த்துவோம்
வருகையில் அவரோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்