Avani Vanthathum

Avani Vanthathum

ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா
அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா
கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா
மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()
ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா
பீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா
உத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா
கர்ப விநாயகா சித்தி விநாயகா
லம்போதர விநாயகா பூர்ணதந்த விநாயகா
சால கடன்கட விநாயகா புஷ்பாண்ட விநாயகா
கொண்ட விநாயகா வேதா வேஷ விநாயகா ராயபுத்திர விநாயகா
பிரணவ விநாயகா
திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த
சூர்யா சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி
கபில கணபதி துண்டி கணபதி வக்ரதுண்ட கணபதி
மகோதக கணபதி ஹேரம்ப கணபதி
கணநாத கணபதி விக்னேஷ கணபதி
விக்னஹார கணபதி பாலா சந்திர கணபதி
சுற்பகர்ண கணபதி ஜெஷ்டராஜா கணபதி
கஜானன கணபதி மகோத்கட கணபதி
கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா
என் வழக்கு என்று முடியும் வந்தருள்வாய்
தும்பிக்கை ஆண்டவாவெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார்
கரு மணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்
பொறிநூலும் இட்டே களி மண் சிலையில் கணபதியை கண்டார்
திரு நீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()
ஓம் வக்ர துண்ட விநாயக ஏக தந்த விநாயகா
திருமுக விநாயகா பஞ்சாஷ்ச்ச விநாயகா
ஹேரம்ப விநாயகா வரத விநாயகா
மோதக விநாயகா
அபயத விநாயகா சிம்ஹதுண்ட விநாயகா
கூநிதாக்ஷ விநாயகா
சிப்ர பிரகாச விநாயகா சிந்தாமணி விநாயகா
தந்த ஹஸ்த விநாயக விசின்ட்டில விநாயகா
உர்தண்டமுண்ட விநாயகா
என் குற்ற குறையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த
சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி
கர்மவ கணபதி யோகேச கணபதி
சித்தி வித்தி கணபதி சிந்தாமணி கணபதி
புத்தீச கணபதி மஹா கணபதி
பூர்நானந்த கணபதி லக்ஷ்மீச கணபதி
சகதேச கணபதி ஏகதந்த கணபதி
லம்போதர கணபதி தூம்ப்ரவர்ண கணபதி
சிப்ர பிரசாத கணபதி
தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா
உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது
மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா
படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா
நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா
உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ
அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()
ஓம் சூலதந்த விநாயகா களிப்ரிய விநாயகா
சதுர்தந்த விநாயகா த்யிமுக விநாயகா
ஜ்யேஷ்ட விநாயகா கஜ விநாயகா
கால விநாயகா நாகேச விநாயகா
மணிகர்ணிக விநாயகா ஆஷா விநாயகா
ஸ்ருஷ்டி விநாயகா யக்ஷ விநாயகா
கஜகர்ண விநாயகா சித்ரகண்டா விநாயகா
மங்கள விநாயகா மித்ர விநாயகா
ஆழிசூழ் உலகில் மேற்க்கை நோக்கி அமர்ந்த
சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி
விக்ட கணபதி ஆசபூர்னாக கணபதி
சூம்ப்ரதேச கணபதி பிரமோத கணபதி
மோத கணபதி சுமுக கணபதி
துர்முக கணபதி வாசவாணி கணபதி
பரேச கணபதி லாபேச கணபதி
தரநீதர கணபதி மங்களேச கணபதி
மூஷிக த்வஜ கணபதி
மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா
எமை காத்தருள்வாய்
மதகரிமுக கணநாயகா
பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார்
அந்த மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார்
வெண் கட்டு உடுத்தி குட்டி கொண்டு தொழுதோம் கணபதியே
இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைசெசேர்தருள்வாயே
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()
ஓம் மோத விநாயகா பிரமோத விநாயகா
சுமுக விநாயகா துர்முக விநாயகா
கணநாத விநாயகா ஞான விநாயகா
பிராண விநாயகா அவிமுக்த விநாயகா
ஐஸ்வர்யா மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த
சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயுரப்ரஜ கணபதி
ராஜேச கணபதி ப்ருத்யுமேச கணபதி ஒம்காரேச கணபதி
குணேச கணபதி வரத கணபதி
சித்தி புத்திப கணபதி கணேச கணபதி
சதுர்பாஹு கணபதி த்ரிநேத்திர கணபதி
கஜமஸ்த கணபதி நிதிப கணபதி
கஜகர்ண கணபதி சிந்தாமணி கணபதி
வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா
எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே
உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி
நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்
ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே
நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே
ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னிதருள்வாயே
வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை போழிவாயே
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம் ()