Anbe Prathaanam
அன்பே பிரதானம், - சகோதர அன்பே பிரதானம்.
பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம், - இவைகளிலெல்லாம்
பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் – கைம்மணியாமே
என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பில்லையானால் - அதிற்பயனில்லை
துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் – பயனதிலில்லை
சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள
புகழிறு மாப்பு, - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா
சினமடையாது, - தீங்கு முன்னாது,
தினமழியாது, - தீமை செய்யாது
சகலமுந் தாங்கும், - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்
Related Songs