Aiyaiyaa Nan Vanthen
ஐயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.
துய்யன் நீர் சோரி,
பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே;
இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.
உள்ளக் கறைகளில்
ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன்,
என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம்
கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.
எண்ணம், வெளியே
போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! - இவை
திண்ணம் அகற்றி
எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
ஐயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.
ஏற்றுக்கொண்டு மன்னிப்பு
ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; - மனம்
தேற்றிக்கொண்டேன்
உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
ஐயையா, நான் வந்தேன்; - தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.