Aanantha Geethangal
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள் - நீக்கவே
அன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய் - தோன்றினார்
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார்
மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார்
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார்
சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு - தோன்றினார்
சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு - தோன்றினார்
சாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு சாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை – மாடடையும் கொட்டில் உண்டு
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார்